BREAKING NEWS

கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தலைமை திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கன்னியாகுமரி அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தலைமை திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம், பால்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் தலைமைத்திறனை வளர்க்கும் நோக்கில் “Developing Leadership” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி வணிக வியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறைகளுடன் இணைந்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை நாகர்கோவில் Holy Cross College (Autonomous) சமூகப்பணி முதுநிலை (MSW) துறையைச் சேர்ந்த மாணவி கே. சுஜாதா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சிக்கு புனித சிலுவை கல்லூரி சமூகப் பணித் துறை தலைவர் மற்றும் ஆசிரியர் வழிகாட்டியாக மேரி தீபா அவர்கள் வழிகாட்டினர்.


நிகழ்ச்சியில் வணிக வியல் துறை தலைவர் டாக்டர் அன்ட்ரூஸ் ஸ்காட் தனது தலைமை உரையில், மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற தலைமைத்திறன் மிகவும் அவசியம் என வலியுறுத்தினார்.

மேலும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஶ்ரீ கிருஷ்னா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ராஜேஸ்வரன் அவர்கள் மாணவர்களுக்கு தலைமைத்திறன் பயிற்சி வழங்கி, தங்கள் திறமைகளை பயன்படுத்தி சிறு தொழில் தொடங்குவது குறித்த ஆலோசனையை வழங்கினார்.

அவரின் உரை மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சி மாணவர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்தி, எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாக உருவாக உதவும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது.

Share this…

CATEGORIES
TAGS