கமயகவுண்டன்பட்டி விவசாய தளவாட பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து.
செய்தியாளர் கம்பம் அசோக்
விவசாய தளவாட பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து சுமார் 35 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் கனகராஜ் என்பவரின் மகன் மகேந்திரன் என்பவர் விவசாயத்திற்கு தேவையான தளவாடப் பொருட்கள் மற்றும் வீடுகளுக்கு தேவையான எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
வழக்கம் போல தனது கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டுக்கு சென்ற பின்னர் அந்தக் கடையில் இரவு திடீரென்று எதிர்பாராத விதமாக தீ கொழுந்து விட்டு எரிவதை கண்ட பொதுமக்கள் கடை உரிமையாளருக்கும், காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆகியவருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கம்பம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதிகப்படியான தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் உத்தமபாளையத்தில் இருந்து தீயணைப்புத் துறை வாகனத்தை வரவழைத்து இரண்டு தீயணைப்பு வாகனங்களைக் கொண்டும் தீயை அணைக்க முயற்சி செய்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமலும், மேலும் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் இருப்பதால் எந்த ஒரு அசம்பாவிதம் நடந்துவிடாமலும் தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.