கல்லணை அருகே தோகூரில் ஆற்றில் இறங்கிய 10க்கும் மேற்பட்ட மாடுகள் கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன.

தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 72 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது. வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கடக்கவோ கூடாது என்றும் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ப்பதற்காகவோ கால்நடைகளை குளிப்பாட்ட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார்.
இந்நிலையில் கல்லணை தோகூர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கிய பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் தண்ணீரின் வேகத்தை அடித்து செல்லப்பட்டன.
CATEGORIES தஞ்சாவூர்