BREAKING NEWS

களக்காட்டில் நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டம்.

களக்காட்டில் நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டம்.

களக்காட்டில் நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் M.K பீர்மஸ்தான் தலைமையில் 14.06.2022 மாலை நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுசெயலாளர் களந்தை மீராசா வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட துணை தலைவர் முல்லை மஜித், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் A.G முகம்மது ஷபி, அம்பை தொகுதி தலைவர் செய்யது இப்ராகிம், நாங்குநேரி தொகுதி தலைவர் ஏர்வை ஆஷிக், இராதாபுரம் தொகுதி தலைவர் துலுவை தெளபிக், யாசர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, புறநகர் மாவட்ட தலைமை அலுவலகம் களக்காட்டில் அமையவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட, வி.கே.புரம், அம்பை, அரிகேவநல்லுர், பள்ளக்கால் பொதுக்குடி, கல்லிடைகுறிச்சி, வீரவநல்லூர், வெள்ளாங்குழி, சேரன்மகாதேவி, பத்தமடை, மேல செவல், களக்காடு, ஏர்வாடி, மூலைக்கரைப் பட்டி, வள்ளியூர், திசையின்விளை, பெட்டை குளம், தூலுக்கரப்பட்டி, ஆகிய இடங்களில் கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நலிவடைந்த மக்களுக்கு நலத்திட்ட உதவி செய்ய வேண்டுமென தீர்க்கமானிக்கப்பட்டது, குறிப்பாக அம்பை, பத்தமடை, ஏர்வாடி போன்ற பகுதிகளில் பேரணி மற்றும் கட்சியின் கொள்கை விளக்க பொது கூட்டம் தீர்மானிக்கப்பட்டது, புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட சில தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்துமாறு பொதுமக்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் என உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இறுதியில் மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான் நன்றியுரையாற்றினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )