கள்ளக்குறிச்சி குரூப் 4 தேர்வு மையம் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு.

கள்ளக்குறிச்சியில் வன்முறையில் சேதமான தனியார் பள்ளியில் நடக்க இருந்த குரூப் 4 தேர்வு, வேறு மையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், `தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (குரூப்-4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் 24-ம் தேதி முற்பகலில் நடைபெற உள்ளது.
