காங்கிரஸ் இளம் தலைவர் வருங்கால பாரத பிரதமர் ராகுல் காந்தியை அமலாக்க துறை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கபடுவதை கண்டித்தும் அதற்கு எதிர்ப்பு.
காங்கிரஸ் இளம் தலைவர் வருங்கால பாரத பிரதமர் ராகுல் காந்தியை அமலாக்க துறை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கபடுவதை கண்டித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த தமிழக ஆளுநரின் வருகையை கண்டித்து வண்ணார்பேட்டை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. சங்கரபாண்டியன் தலைமையில் இன்று சனிக்கிழமை கறுப்பு கொடி ஏற்றப்பட்டது.
மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார்,வழக்கறிஞர் துரை. செந்தில்குமார் மாவட்ட துணைத்தலைவர்கள் உதயகுமார்,வெள்ளை பாண்டியன்,கவி பாண்டியன்,வண்ணை சுப்ரமணியன், சிவன் பெருமாள் மாவட்ட செயலாளர் பரணி இசக்கி,மண்டல தலைவர்கள் மாரியப்பன், எம்.ஒய்.ரசூல் மைதீன்,ஐயப்பன்,பி.வி.டி.ராஜேந்திரன்,ஐ.என்.டி.யு.சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், சின்ன பாண்டியன், மற்றும் ஆபிரகாம் லெஸ்லி,மாநில மகளிர் அணி செயலாளர் மாரியம்மாள்,மகளிர் அணி மாவட்ட தலைவி அனீஸ் பாத்திமா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தகவல் கேள்விப் பட்ட காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து கறுப்பு கொடியை அகற்றினர் அதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.