காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்புகள் ஆலோசனை கூட்டம் தேனியில் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில், தனியார் திருமண மண்டபத்தில் மாநிலச் செயலாளர் மற்றும் தேனி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் இ.ஆர்.எஸ் இளங்கோவன் முன்னிலையில் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில்,
கன்னியாகுமரி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் செய்யும் ராகுல் காந்தி அவர்களின் நடை பயணம் வெற்றி அடையவும் இரண்டாவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட மல்லிகார்ஜுன் கார்களுக்கு நன்றி தெரிவித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆணைக்கிணங்க மாவட்டம் தோறும் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதியிலும் தொகுதிக்கு நூறு காங்கிரஸ் கொடி வீதம் 400 கொடிகளை நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் நிறுவ வேண்டும் என கழக தொண்டர்களுக்கு தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைமையால் நிர்ணயிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அறிமுகம் படுத்தப்பட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் ஏராளமான பிரச்சனைகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.