காஞ்சிபுரம் அருகே முதன்முறையாக விப்பேடு வளர்புரம் பகுதி பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.

காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு ஊராட்சியில் உள்ள வளர்புரம் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் பல ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா அனைத்து பகுதிகளிலும் கொண்டாட தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர் கொடிகுமார், ஒன்றிய கவுன்சிலர் தேவபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுடன் புது பானையில் பச்சரிசி வெல்லம் , முந்திரி, திராட்சை இட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.
அதன்பின் பொங்கல் பொங்கியதும் பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சி குரலிட்டு மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடினர்.
பின்னர் கிராம பகுதி மக்களுக்கு புத்தாடை கரும்பு உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.அதன் பின் பொங்கலிட்ட பொங்களை படையலிட்டு அனைவரும் ஒன்று கூடி வழிபட்டனர்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி அருள் , துணைத் தலைவர் மேகலா நவீன்குமார் , ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் நவீன் சுசீலா முருகன் மணிகண்டன் சபரீஷ்வரன் சோனியா மற்றும் திமுக நிர்வாகிகள் ஊர் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தங்கள் வாழ்நாளில் முதல் முறையாக அனைத்து தரப்பு மக்களிடம் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடியது பெரும் மகிழ்ச்சி அளிப்பது தங்கள் குழந்தைகளுக்கு இது பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது எனவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.
எங்களுடன் அனைத்து தரப்பினரும் ஒன்றுகூடி பொங்கலிட்டு பொங்கல் விழா கொண்டாட இது வே முதல் முறையாகும் இதனால் எங்கள் சமூகத்தினர் மிகுந்த மகிழ்ச்சி எல்லாம் ஆனந்துடன் உள்ளனர்.