BREAKING NEWS

காட்பாடி செங்குட்டை பகுதியில் 4வது வார்டில் தூர்ந்து போன வாய்க்கால்: நடவடிக்கை எடுக்காத கவுன்சிலர்: நாற்றம் எடுக்கும் படலம் தொடக்கம்!

காட்பாடி செங்குட்டை பகுதியில் 4வது வார்டில் தூர்ந்து போன வாய்க்கால்: நடவடிக்கை எடுக்காத கவுன்சிலர்: நாற்றம் எடுக்கும் படலம் தொடக்கம்!

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி 1வது மண்டலம், காட்பாடி 4வது வார்டு, செங்குட்டை புதுத்தெரு விரிவு பகுதியில் உள்ள சாக்கடை கழிவு நீர் செல்லும் வாய்க்கால் தூர்ந்து போய் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கின்றது.

இந்த அவலம் கடந்த ஒன்றை ஆண்டுகளாக நீடித்த வண்ணம் உள்ளது. இதை இந்த 4வது வார்டில் திமுக கவுன்சிலரான சித்ரா லோகநாதன் கண்டு கொள்வதே இல்லை எனவும்,

இந்த தெருவில் என்ன பிரச்சனை நிலவுகிறது என்பதை அவர் சரி செய்து தரவில்லை என்றும் புதுத்தெரு விரிவு பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர்.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான வாய்க்கால் வசதி , குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி , சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டிய மாநகராட்சி கவுன்சிலர் சித்ரா லோகநாதன் எந்த பணியையும் செய்யாமல் ஓட்டு வாங்கிக் கொண்டு சென்றதோடு சரி . திரும்பவும் இந்த பக்கத்துக்கு அவர் வந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி 4வது வார்டு கேட்பாரற்றும், மேய்ப்பாரற்றும் கிடக்கிறது. இதனால் கழிவு நீர் செல்ல முடியாமல் வாய்க்கால் தூர்ந்து போய் துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிட்டது . கால்வாயில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தி ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

ஒருபுறம் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனால் இந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் சொல்லலொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் .ஆதலால், வேலூர் மாநகராட்சி ,காட்பாடி 1வது மண்டலத்திற்கு உட்பட்ட 4. வது வார்டு பகுதியில் உள்ள கழிவு நீர் செல்லும் கால்வாய்களை தூர்வாரி கழிவு நீர் தேங்கி நிற்காமல் தங்கு தடை இன்றிசெல்ல வழிவகை செய்ய வேண்டும் என்றும் ,”:) பொதுமக்களுக்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தி மற்றும் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாவதை அடியோடு தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வேலூர் மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொதுமக்களின் கோரிக்கையை வேலூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா? அல்லது உதாசீனப்படுத்துமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

CATEGORIES
TAGS