காட்பாடியில் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!
காட்பாடியில் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி ) நடந்தது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மக்களிடம் மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வேலூர் மாவட்டம் ,காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்றது. இதில் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், வருவாய் ஆய்வாளர் தீனதயாளன், காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன் ,துணை மேயர் சுனில்குமார் ,1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா , மெட்டுகுளம் ஒன்றியத் தலைவர் அனிதா இளங்கோவன், 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா மகேந்திரன்,10வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.பி ரமேஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் பட்டா பெயர் மாற்றம், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி பல்வேறு மனுக்களையும் அளித்தனர். மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வழங்க உத்தரவிடப்பட்டது .மேலும் பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உத்தரவு ,விதவை சான்றுகளும் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
