காமராஜர் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் அவர்களின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு பொன்னுசாமி அவர்கள் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திரு சுப்பிரமணியன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திரு நைனா முகமது ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி கவிதை போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர்திரு. சோமசுந்தரம் அவர்கள் சார்பாக இனிப்பு வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அப்பள்ளியின் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
