BREAKING NEWS

காரின் கண்ணாடியை உடைத்து ரூ. 1. 32 லட்சம் மதிப்புள்ள நகை பணம் திருட்டு

காரின் கண்ணாடியை உடைத்து ரூ. 1. 32 லட்சம் மதிப்புள்ள நகை பணம் திருட்டு

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலை பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் காரை நிறுத்திவிட்டு உணவு அருந்தச் சென்றபோது இரண்டு மோட்டார் பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் காரின் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த ரூ. 1.32 லட்சம் மதிப்புள்ள நகை பணத்தை திருடிச் சென்றனர்.

 

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான ரேவதி. இவர் நேற்று குடும்பத்துடன் மதுரையிலிருந்து பாண்டிச்சேரிக்கு கார் மூலம் சென்று கொண்டு இருந்தனர். காரை எங்கும் நிறுத்தாமல் சென்று கொண்டிருந்தனர்.

 

இந்நிலையில் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலையில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதிக்கு உணவு அருந்தச் சென்றனர். அப்போது இரண்டு மோட்டார் பைக்கில் அங்கு வந்த நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத மர்ம கும்பல் காரின் கண்ணாடி உடைத்து காரின் உள்ளே கைப்பையில் இருந்த ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள 13 கிராம் தங்க நகை 50 கிராம் வெள்ளி, 62,000 ரொக்கம் என 1.32 மதிப்புள்ள நகை பணத்தை திருடிச் சென்றனர்.மேலும் கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாததும் அது திருட்டு வாகனம் என தெரிய வந்தது.

 

 

இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் ரேவதி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பணம் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS