கிணற்றில் விழுந்த ஜேசிபி எந்திரம் ஒருவர் பலி ஒருவர் உயிருடன் மீட்பு.

சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம் மாரமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு மலையான் கோவில் அருகில் பொன்னுசாமி மகன் செந்தில். என்பவருக்கு சொந்தமான கிணற்றிற்கு அருகில் மாரமங்கலம் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இரண்டு மூட்டை சிமெண்ட் பொக்லின் எந்திரம் மூலம் கொண்டுவரப்பட்டது.
இதன் பிறகு பொக்லின் எந்திரத்தை கிணற்றில் நீர் எடுத்து கழுவ முற்படும்பொழுது. ஓரத்தில் உள்ள கருங்கல் கட்டிடம் சரிந்து எதிர்பாராத விதமாக பொக்லின் இயந்திரம் கிணற்றிற்குள் விழுந்தது .இந்த விபத்தில் பொக்லைன் ஓட்டுநர் கொல்லிமலையைச் சேர்ந்த பழனிசாமி மகன் சதீஷ்குமார்(25) மற்றும் உடன் இருந்த காளி மகன் கரிய மலை(63) கிணற்றிற்குள் விழுந்தனர்.
சதீஷ்குமாருக்கு நீச்சல் தெரிந்ததால் அவர் மேலே வந்துள்ளார். உடன் இருந்த கரிய மலை என்பவர் பொக்லின் எந்திரத்தின் அடியில் சிக்கி நீரில் மூழ்கி இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர்.
மற்றும் காவல் துறையினர் . சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்த கரியமலையின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் மாரமங்கலம் பதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த விபத்து குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.