BREAKING NEWS

குஜராத் சட்டமன்ற தேர்தல் பார்வையாளராக காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் முனைவர் ஜானி ஜாவித் நியமனம்.

குஜராத் சட்டமன்ற தேர்தல் பார்வையாளராக காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் முனைவர் ஜானி ஜாவித் நியமனம்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் சார்பில் தமிழகத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரும், திருப்பத்தூர் ஒன்றிய காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திரு ஜானி ஜாவித் .

 

எதிர் நோக்கி இருக்கும் குஜராத் சட்டமன்ற தேர்தல் 2022-க்கான ராஜ்கோட் மாவட்டத்தில் அடங்கியுள்ள எட்டு சட்டமன்றங்களின் தேர்தல் பார்வையாளராக காங்கிரஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்மை தலைவரும் ராஜ்ய சபா எம். பி-யுமான திரு.இம்ரான் பிரதாப்கரி அவர்கள் நியமித்து அவசர ஆணை பிறப்பித்துள்ளார்.

 

மேலும்காங்கிரஸ் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் மேற்கொண்டுள்ள பாரத் ஜோடோ யாத்திரையின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் சார்பில் தமிழக ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டமைக்காக இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

தமிழக காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறையின் மாநில தலைவராக விரைவில் முனைவர் திரு ஜானி ஜாவித் அவர்கள் நியமிக்கபட வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )