BREAKING NEWS

குடியாத்தம் பகவதிராஜிடமிருந்து நகை ,பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு!

குடியாத்தம் பகவதிராஜிடமிருந்து நகை ,பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் செருவங்கி நகராட்சி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் நாகலக்ஷ்மி. இவரது பள்ளியில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் பகவதிராஜ் என்பவர் தான் இந்திய ராணுவத்தில் வேலை செய்து வருவதாக கூறிக்கொண்டு வந்து அறிமுகமானார்.

தற்போது ஆம்பூர் காவல் நிலையத்தில் ரகசிய காவலராக பணி செய்வதாகவும் அப்போது கூறினார். தனக்கு இரண்டு பிள்ளைகள் எனவும் கூறினார்.

செரீனா நான்காம் வகுப்பிலும், செரீஷ் என்பவரை ஐந்தாம் வகுப்பிலும் பள்ளியில் சேர்த்தார்.

இந்நிலையில் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நாகலக்ஷ்மி வீட்டிற்கு வந்து பழகினார். இதனிடையே கடந்த 04. 10.2024 அன்று அவர்களுடைய உறவினர்களுக்கு காதுகுத்து விசேஷத்திற்கு செல்வதாகக் கூறி நாகலக்ஷ்மியிடம் 5 பவுன் நகை வாங்கிச் சென்றார். அதற்கு முன்னதாக ரூ.3,000 லட்சம் பணமும் ரொக்கமாக பெற்றுக் கொண்டு ஊரை விட்டுச் சென்று விட்டார்கள்.

இந்த தகவலை கேள்விப்பட்டதும் நாகலக்ஷ்மி அதிர்ச்சியடைந்தார். மேலும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவாக அளித்தார்.

மேலும் குடியாத்தம் காவல் நிலையத்தில் எஃப். ஐ .ஆர். பைல் செய்தும் உள்ளார் நாகலக்ஷ்மி. நாகலக்ஷ்மி பலமுறை நகர காவல் நிலையத்திற்குச் சென்று பணத்தையும், நகையையும் மீட்டுத் தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு இதுவரையும் காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாகலக்ஷ்மி மன வேதனையோடு வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக எழுதி கொடுத்துள்ளார்.

அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்லி தகவல் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் நாகலக்ஷ்மி இழந்த பணம் மற்றும் நகையை விரைந்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து பெற்றுத் தர வேண்டும், மீட்டுத்தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் பாதிக்கப்பட்ட தலைமையாசிரியர் நாகலக்ஷ்மி.

CATEGORIES
TAGS