BREAKING NEWS

குத்தாலம் அருகே வடிவுடையம்மன் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கண்டியூர் கிராமத்தில் வடிவுடையம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது. இதற்கான அனுக்ஞை மற்றும் யஜமான சங்கல்பம் உள்ளிட்ட பூஜைகள் கடந்த ஐந்தாம் தேதி துவங்கியது.

அதனைத் தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் இன்று நிறைவுற்று மஹா பூர்ணாகுதி நடைபெற்று. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடன்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக மேள வாத்தியங்கள் முழங்க வலம் வந்தது.

பின்னர் பரிவார தெய்வங்களான ஸ்ரீ பத்ரகாளி அம்மன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் ஆகியவற்றின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் வடிவுடையம்மன் திருக்கோயிலின் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகமானது வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட நிலையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.https://youtu.be/htzIQmCbNuU

Share this…

CATEGORIES
TAGS