குமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு” நடைபெற்றது.

“பள்ளி மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி, கோணம், குருசடி என்ற இடத்தில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு மன அழுத்தம் என்றால் என்ன? அதன் காரணங்கள் ? தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பெற்றதுடன் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தெரிந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அருட்சகோதரி.பேரின்ப பாய் மற்றும் பிற ஆசிரியர்களும் கலந்துக் கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திருமதி.கிறிஸ்டி ரம்யா , சைல்டுலைன் குழு உறுப்பினர் ,கோட்டார் சமூக சேவை சங்கம் நாகர்கோவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதை தொகுத்து வழங்கியவர் எ.எம்.எல் நரம்பியல் மனநல மருத்துவமனை, பால்பண்ணை மற்றும் திருச்சிலுவை கல்லூரி சமூக பணித்துறை மாணவி அ. சகாய ராணி.
இந்நிகழ்ச்சியில் 45-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.
