BREAKING NEWS

கும்பகோணத்தில் ரூ.4.30 கோடிக்கு பருத்தியை ஏலம்.

கும்பகோணத்தில் ரூ.4.30 கோடிக்கு பருத்தியை ஏலம்.

கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. தஞ்சை ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் கும்பகோணம், சுவாமிமலை, கபிஸ்தலம், திருப்பனந்தாள், சோழபுரம், நாச்சியார்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பருத்தி சாகுபடி செய்திருந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 324 லாட் பருத்தியை மறைமுக ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.

 

 

இதில் 9 வியாபாரிகள் கலந்துகொண்டு ரூ.4.30 கோடிக்கு பருத்தியை ஏலம் எடுத்தனர். ஏலத்தில் பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக ரூ.12 ஆயிரத்துக்கும், குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரத்து 500-க்கும் விலைபோனது. இதனால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )