BREAKING NEWS

கும்பகோணம் அருகே அறிவியல் கண்காட்சியில் மரக்கன்றுகளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் வழங்கி தொடங்கி வைத்தார்.

கும்பகோணம் அருகே அறிவியல் கண்காட்சியில் மரக்கன்றுகளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் வழங்கி தொடங்கி வைத்தார்.

அறிவியல் வளர்ச்சிக் கழகம் சார்பில் திருப்பனந்தாள் கிராமப் பள்ளிகளுக்கு இடையே அறிவியல் கண்காட்சியும்
மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அறிவியல் வளர்ச்சி இயக்கத்தின் நிறுவனர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று சிறந்த 17 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கு வீடுதோறும் விருட்சம் என்ற நிகழ்ச்சியில் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் சுமதி,சிவக்குமார், டாக்டர் ராதிகா மைக்கேல், மாவட்ட ரோட்டரி கவர்னர் பாலாஜி முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன்,தலைமையாசிரியர் ஜெயராமன், ஊராட்சி தலைவர் குணசேகரன், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )