BREAKING NEWS

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை நிர்வாகம் தங்களை மிரட்டுவதாக வடமாநிலத்தவர் வெளியிட்ட வீடியோ வைரல்.

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை நிர்வாகம் தங்களை மிரட்டுவதாக வடமாநிலத்தவர் வெளியிட்ட வீடியோ வைரல்.

பணி பாதுகாப்பு வழங்க வேண்டி தமிழக முதல்வருக்கு கோரிக்கை.

 

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் வினோ மெக்கானிக் எனப்படும் காற்றாலை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இதில் தொமுச சங்கத்தில் 93 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதில் குறிப்பாக 18 வெளி மாநிலங்களைச் சார்ந்த தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர்.

இந்த தொழிலாளர்கள் பணிபாதுகாப்பு, ஊதிய உயர்வு, போனஸ் தொகை உள்ளிட்ட சலுகை குறித்து தீர்வு காண ஏதுவாக திமுக தொழிலாளர் முன்னேற்ற அரசாங்கத்தில் கடந்த 4-ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் புதிதாக பணியமர்த்தப்பட்ட மனித வள மேலாளர் மணிமாறன் அவர்கள் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை விட்டு அனைத்து தொழிலாளர்களும் வெளியேற வேண்டும் அப்போதுதான் தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு சலுகைகள் வழங்கும் இல்லையென்றால் சங்கத்தில் இருக்கும் அனைவரும் வேலையை விட்டு நிறுத்தப்படுவார்கள் என நேரடியாக வீடுகளுக்கே சென்று மிரட்டுவதாக கூறப்படுகிறது.

மேலும் அதை மெய்ப்பிக்கும் வகையில் சங்கத்திலிருந்து வெளியேறாத நபர்களை மருத்துவ தகுதி சான்றிதழ் பெற்று வருமாறு தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பணிநெருக்கடி, பணி நேரம் மாற்றம் உள்ளிட்ட பல வகையில் தொழிலாளர்களுக்கு நெருக்கடி அளித்து சோகாஷ் கடிதம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

இது குறித்து வெளி மாநிலங்களைச் சார்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி பாதுகாப்பு அளியுங்கள் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Share this…

CATEGORIES
TAGS