குற்றாலம் அருவியிலும், திற்பரப்பு அருவியிலும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம் அருவியிலும், திற்பரப்பு அருவியிலும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம் அருவியிலும், திற்பரப்பு அருவியிலும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. விடுமுறை நாள் என்பதால் அந்த அருவிகளில் குளிக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அணைப் பகுதிகளிலும், பிற இடங்களிலும் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும், நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனையடுத்து அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. விடுமுறை நாட்களான நேற்றும் இன்றும் குற்றாலத்தில் குளிக்க கூட்டம் குவிந்தது. மெயின் அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
CATEGORIES தென்காசி