கூடன்குளம் பள்ளி மாவட்ட அளவில் சாதனை மற்றும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு.
![கூடன்குளம் பள்ளி மாவட்ட அளவில் சாதனை மற்றும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு. கூடன்குளம் பள்ளி மாவட்ட அளவில் சாதனை மற்றும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/10/IMG-20221013-WA0085.jpg)
திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக் கிடையேயான கைப்பந்து போட்டிகள் புதன் அன்று புதூர் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த போட்டியில், திசையன்விளை குறுவட்ட போட்டிகளில் 17 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில் முதலிடம் பிடித்த கூடன்குளம் புனித அன்னம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணியினர் பங்கேற்று விளையாடினர்.
இறுதிப் போட்டியில் பாளையங்கோட்டை இக்னேஷியஸ் கான்வென்ட் அணியினரை நேர் செட்களில் வென்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிகளுக்குத் தேர்வு பெற்றனர்.
சாதனை படைத்த மாணவிகளையும், உடற்பயிற்சி ஆசிரியரையும், தலைமையாசிரியர் மற்றும் தாளாளரையும் பொது மக்களும், பெற்றோர்களும் வெகுவாக பாரட்டினர்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS கைப்பந்து போட்டிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்புதூர் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிவிளையாட்டு செய்திகள்
சிறுமிகள் க்கு வாழ்த்துகள்