கொத்தாம்பாடி பிரிவு சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.

சேலம் மாவட்டம் ஆத்தூர் கொத்தாம்பாடி பிரிவு சாலை அருகே முல்லைவாடி பகுதியை சேர்ந்த மாயக்கண்ணன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வாழப்பாடி செல்லும்போது கொத்தாம்பாடி பிரிவு சாலையில் தளவாய் பட்டியை சேர்ந்த ஜெயராஜ்,

தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள் உடனடியாக அப்பகுதி மக்கள் காயமடைந்த இருவரையும் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்,

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
CATEGORIES சேலம்
