BREAKING NEWS

கோபிசெட்டிபாளையத்தில் கோபி மின்பகிர்மான வட்டத்தின் சார்பில் மின்சார பெருவிழா நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையத்தில் கோபி மின்பகிர்மான வட்டத்தின் சார்பில் மின்சார பெருவிழா நடைபெற்றது.

மத்திய மாநில அரசின் ஒருங்கிணைந்த மின்மேம்பாட்டு திட்டத்தில் செயல்படுத்திய மின்திட்டங்கள் குறித்த பொதுமக்கள் விவசாயிகளிடையே விழிப்புணர்வு.

 

நாட்டின் 75வது சுதந்திர அமுதபெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மின்வாரியத்தின் சார்பில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின் சக்தி 2047 என்ற தலைப்பில் மத்திய மாநில அரசுகள் சார்பில் செயல்படுத்தப்பட்ட மின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

 

இதனடிப்படையில் இன்று ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் கல்லூரியில் கோபி மின்பகிர்மான வட்டத்தின் சார்பில் நடைபெற்ற மின்சார பெருவிழாவில்
கோபி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார், மாவட்ட நோடல் அலுவலர் வரதராஜன் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த மின்மேம்பாட்டு திட்டத்தில் கோபி மின்பகிர்மான வட்டத்தில் ரூ.45கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட மின்திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினார்.

 

 

இதில் புதிதாக துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்ட மாக்கினாங்கோம்பை, புஞ்சைதுறையம்பாளையம், ஏளூர், பெரியகள்ளிப்பட்டி பகுதியில் விவசாயத்திற்கும் சிறு குறு தனியார் நிறுவனங்களில் தொழில் செய்ய ஏற்ற வகையில் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என்றும் தடையில்லா மின்சாரம் வழங்க மின்பாதையில் திறன் அதிகரிப்பட்டு நகர பகுதியில் 300 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வணிக நிறுவங்கள், தொழிற்சாலைகள் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.

 

 

மேலும் விவசாய மின் இணைப்புகளில் மின்மோட்டர் சீராக இயங்க கூடுதலாக 5000 கேப்பாசிட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளதால் தடையில்லா மும்முனை மின்சாரத்தின் வழங்கப்பட்டு விவசாயிகள் அதிகளவில் பயனடைந்து வருவதாக தெரிவித்தார். இதனைதொடர்ந்து நிகழ்ச்சியில் மின்சிக்கனம் குறித்து கல்லூரி மாணவிகளின் நாடகத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

இதனையடுத்து காணோலி காட்சி வாயிலாக செயல்படுத்திய மின்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார் நிகழ்ச்சியில் கோபி, அந்தியூர், அத்தாணி, சத்தியமங்கலம் பகுதியிலிருந்து ஒருங்கிணைந்த மின்மேம்பாட்டு திட்டங்களால் பயனடைந்த பொதுமக்கள், விவசாயிகள், வணிக நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுக்கும் மின்வாரியத்திற்கும் நன்றியை தெரிவித்தனர் நிகழ்ச்சியில் கோபிநகர்மன்ற தலைவர் நாகராஜ், செயற்பொறியாளர் சங்கர், வெங்டேஷ், குலசேகர பாண்டியன், உதவிசெயற்பொறியாளர்கள் வாசுதேவன், ராஜாமணி, சங்கீதா, பிரப மற்றும் மின்வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி முடிவில் உதவி செயற்பொறியாளர் சின்னச்சாமி நன்றி தெரிவித்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )