BREAKING NEWS

கோவில்பட்டி அருகே அருள்மிகு டெல்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு யாகசாலை பூஜையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இ.சத்திரப்பட்டி அமைந்துள்ள அருள்மிகு டெல்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் திருக்கோவில் மகா பூரண கும்பாபிஷேக விழா வரும் 17ஆம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு இன்று காப்பு கட்டுதல் கும்பத்தில் தீர்த்தத்தை நிரப்பப்பட்டு கோயில் வலம்வந்து யாகசாலையில் எழுந்தருள மற்றும் கோ பூஜை யாகசாலையில் தீர்த்துக் குடங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதில் ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், மேலஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )