BREAKING NEWS

கோவில்பட்டி அருகே நடைபெற்ற தீவிர காசநோய் கண்டுபிடிப்பு முகாம்-ஏராளமான ஆண்கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கோவில்பட்டி அருகே நடைபெற்ற தீவிர காசநோய் கண்டுபிடிப்பு முகாம்-ஏராளமான ஆண்கள் பெண்கள் என பலரும்  கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள குருவார்பட்டி கிராமத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்-ரே வாகனம் மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காசநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற்றது.

 

 

இம்முகாமில் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக ரத்த பரிசோதனை மற்றும் ரத்தத்தின் சர்க்கரை அளவு உயர் ரத்த அழுத்தம் சளி பரிசோதனை எக்ஸ்-ரே எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

 

 

இம்முகாமில் கிராம மக்கள் 500-மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர், சுகாதர ஆய்வாளர் பாலகிருஷ்ணன், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு பொது மருத்துவ சேவை காச நோயிலிருந்து விடுபடுவது குறித்து ஆலோசனையும் வழங்கினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )