கோவில்பட்டி அருகே விவசாய நிலத்தை உரிமையாளருக்கு தெரியாமலே பத்திர பதிவு செய்த சார் பதிவாளர் கண்டித்து தமிழ் விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி அருகே விவசாய நிலத்தை உரிமையாளருக்கு தெரியாமலே பத்திர பதிவு செய்த சார் பதிவாளர் கண்டித்து தமிழ் விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை உள்ள கரடிகுளம் பகுதியில் உள்ள சர்வே எண்ணில் சுமார் 58 ஏக்கர் விவசாய நிலத்தை சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளருக்கு தெரியாமையே கழுகுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு நடந்துள்ளதாகவும் பத்திரப்பதிவு நம்பரை ரத்து செய்யக் கோரியும் பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் விவசாய அமைப்பினர் கழுகுமலை சார் பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் பத்திரபதிவு செய்த ஆவண நம்பரை ரத்து செய்ய கோரியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷங்களை எழுப்பினர்.இந்த ஆர்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.