BREAKING NEWS

கோவில்பட்டி நகராட்சி 32 வது வார்டு பாரதிநகர் பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகள் செய்து தராத நகராட்சியை கண்டித்து, நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் 32வதுவார்டு நகரமன்ற உறுப்பினர் தலைமையில் நகராட்சி முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டம்.

கோவில்பட்டி நகராட்சி 32 வது வார்டு பாரதிநகர் பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகள் செய்து தராத நகராட்சியை கண்டித்து, நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் 32வதுவார்டு நகரமன்ற உறுப்பினர் தலைமையில் நகராட்சி முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி 32வார்டு பாரதிநகர் பகுதியில் கடந்த ஆண்டு பேவர்பிளாக் சாலைகள் அமைக்கும் பணியை ஆரம்பித்துவிட்டு பின்பு அந்த சாலை பணிகள் கைவிடப்பட்டன.

தொடர்ந்து அந்த சாலைகள் மற்றும் வாறுகால் வசதி, உடைந்த நிலையில் உள்ள பாலம், குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையம் கட்டிடம் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டி கடந்த நகர்மன்ற கூட்டத்தில் 31.03.2022அன்று மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், இன்றும் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் 100 தீர்மானங்கள் வைக்கப்பட்டன.

அதில் 32வதுவார்டு மக்களின் ஒரு கோரிக்கை கூட நடைமுறை படுத்தபடாததிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக 32வதுவார்டு நகர் மன்ற உறுப்பினர் கவியரசன் கூட்டத்தில் வெளிநடப்பு செய்தார், அதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக 32வதுவார்டு நகர் மன்ற உறுப்பினர் கவியரசன் தலைமையில் அந்த வார்டு பகுதி பொதுமக்கள் திரளாக வந்து நகராட்சி முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கோரிக்கைகளை செய்து தருவதாக ஏற்றுக் கொண்டார்கள். அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் நகராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )