BREAKING NEWS

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 38-வது கல்லூரி ஆண்டு விழா.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 38-வது கல்லூரி ஆண்டு விழா.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 38 வது ஆண்டு விழா கலையரங்கில் நடைபெற்றது.கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் அருணாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி இயக்குநர் முனைவர் சண்முகவேல் முன்னிலை வகித்தார். சென்னை, லூகாஸ் டி.வி.ஸ். லிமிடெட் நிறுவனத்தின் கார்ப்பரேட் இன்டஸ்ட்ரியல் ரிலேசன்ஸ் தலைவர் மணி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி ஆண்டு விழா சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில். அதே நிறுவனத்தின் பிளாண்ட் மனித வளத்துறை தலைவர் உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.


கல்லூரியின் மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து பொறியியல் துறைகளிலும் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு பருவத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்குப் விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

 

மேலும், ஆண்டு முழுவதும் கல்லூரிக்குத் தவறாமல் வருகை புரிந்து நூறு சதவீத வருகைப்பதிவுடன் சிறப்பாகக் கல்வி கற்ற மாணவ, மாணவிகள், தேசிய மாணவர் படை (என்.சி.சி), நாட்டு நலப்பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்), ரோட்டராக்ட், செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகளில் தன்னலமற்றுப் பணியாற்றிய சிறந்த மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு சான்றிதழ்களுடன் பரிசுகள் வழங்கப்பட்டது.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அவற்றில் சிறப்பிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் சான்றிதழ்களுடன் வழங்கப்பட்டது. 2020-21 கல்வியாண்டின் சிறந்த மாணவருக்கான விருதினை இயந்திர பொறியியல் துறை மாணவர் எல்.கார்த்திகேயனுக்கும், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவர் என்.வி.ஆண்டோன் பிரான்ஸிஸ் ஜீஜோவுக்கும் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த மாணவிக்கான விருதினை மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை மாணவி செல்வ தேவி பெற்றார்.

2021-22 கல்வியாண்டிற்கான சிறந்த மாணவர் விருதை மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை மாணவர் எம்.ஹ்ரித்திக் ரோஷன் பெற்றார். சிறந்த மாணவிக்கான விருதை மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறை மாணவி டி.தீபிகா பெற்றார்.

மேலும், மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்று ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வரும் கல்லூரி பேராசிரியர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்சியில் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.மதிவண்ணன், இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர், பேராசிரியர் ராஜேஸ்வரன், பொறியாளர் ஜெயபால், தணிக்கையாளர் பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் சம்பத்குமார், மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைப் பேராசிரியர் முனைவர் மொஹைதீன் பிச்சை நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. விழாவின் சிறப்பு ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநர் மற்றும் முதல்வர் ஆகியோரின் ஆலோசனைப்படி இயந்திர பொறியியல் துறை பேராசிரியர் முனைவர் ஐயாராஜாவின் ஒருங்கிணைப்பில் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )