BREAKING NEWS

கோவில்பட்டியில் 8 வயது சிறுமிக்கு இருதய அறுவை சிகிச்சை நிதி உதவி அளித்து நலம் விசாரித்த கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ.

கோவில்பட்டியில் 8 வயது சிறுமிக்கு இருதய அறுவை சிகிச்சை நிதி உதவி அளித்து நலம் விசாரித்த கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ.

 

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காமராஜர் நகர் பகுதி சேர்ந்த டேனியல் ஏஞ்சலாவுக்கு பிறந்த ஜெயராணி 8 வயது சிறுமிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்காக சென்னை மருத்துவமனையில் சிறுமி ஜெயராணி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

 

 

சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நிதி உதவி மருத்துவ உதவிகளை மேற் கொண்டார்.சிறுமி அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் சிறுமி ஜெயராணி இல்லத்திற்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ இன்று நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

 

இதில் நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ்,

 

 

விவசாய அணி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் ராமர், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அதிமுக நிர்வாகிகள் சிங்கராஜ், அழகர்சாமி, மனோகரன், பழனி முருகன், முருகன், கோபி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )