கோவில்பட்டியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து – பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து – பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சென்னை கேசவன் தலைமையில் நடைபெற்ற,
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அரசு அதிகாரிகள் திமுக பிரதிநிதிகளின் லஞ்சம் ஊழல் அதிகரித்துக் கொண்டே போகின்ற போக்கை கண்டித்தும் மத்திய அரசு குறைத்தது போல் மாநிலத் திமுக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை விலையை உடனே குறைக்க சொல்லி வலியுறுத்தியும் உள்ளிட்ட 9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.