கோவில்பட்டியில் பேட்டரி கடையின் கதவை உடைத்து திருட முயற்சி – பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தப்பியது சிசிடிவி காட்சியின் பதிவுகளை கொண்டு காவல்துறை விசாரணை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் ஜெகதீஸ் என்பவர் பேட்டரி கடை நடத்தி வருகிறார் இவர் நேற்று இரவு வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இரவு நேரத்தில் பைக்கில் வந்த 2 இளைஞர்கள் இரும்பு ராடால் ஷட்டரின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். இன்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த போது ஜெகதீஷ் ஷட்டரின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ய வந்துள்ளது.
தெரிய வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் இதனை அடுத்து காவல்துறையினரிடம் புகார் அளித்தல் அடிப்படையில் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES தூத்துக்குடி