சங்கரன்கோவில் அருகே செவல்குளத்தில் வெறி நாய் ஆட்டுக்கொட்டைக்குள் புகுந்து கடித்துக் குதறியதில் 35 ஆடுகள் இறந்தன.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் செவல்குளத்தைச் சேர்ந்தவர். கிருஷ்ணசாமி.இவர் 50 ஆடுகளை வளர்த்து வந்தார். அதற்காக இரும்பு வேலியிலான ஆட்டுக்கொட்டகை அமைத்து அதில் 50 ஆடுகளையும் அடைத்து வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு ஆட்டுக்கொட்டகைக்குள் வெறி நாய் நுழைந்து ஆடுகளை கடித்து குதறியது. இதில் 35 ஆடுகள்பலியாயின. இதைத்தொடர்ந்து கிருஷ்ணசாமி வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தார்.இதன் பின்னர் அப்பகுதி கால்நடை மருத்துவர் ஆதித்யா சம்பவ இடத்திற்கு சென்று ஆடுகளை பரிசோதனை செய்தார்.
ஒரு ஆடு வளர்ந்து குட்டி ஈன்றுவதற்கு 3 ஆண்டுகள் ஆகும் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்த ஆடுகள் இறந்ததுள்ளாதால் கிருஷ்ணசாமியின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில தினங்களில் பொங்கல் திருவிழா நடைபெறு இருப்பதால் ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனையாகும் என எதிர்பார்த்து இருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது கிருஷ்ணசாமியை அதிர்ச்சியடை வைத்துள்ளது எனவே இது குறித்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.