சங்கரன்பந்தலில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா – அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே சங்கரன் பந்தலில் பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது.
சங்கரன்பந்தல் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை விழாவை நடைபெற்றது.

இதில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ் கலந்துகொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதில் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வி.ஜி.கண்ணன், செம்பை தெற்கு ஒன்றிய அவை தலைவர் தங்கராசு, இலுப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ரவி,
மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் முரளி, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி செயலாளர் விமல்ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
