BREAKING NEWS

சதுரங்க வேட்டை திரைப்படம் பாணியில் பேராசைக்கு அடிமையானவர்களை வீழ்த்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த பல தொழில் மன்னன் ஜே.ஜே.குருப்ஸ் சந்திரனை 12 மணி நேரத்தில். காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.

சதுரங்க வேட்டை திரைப்படம் பாணியில் பேராசைக்கு அடிமையானவர்களை வீழ்த்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த பல தொழில் மன்னன் ஜே.ஜே.குருப்ஸ் சந்திரனை 12 மணி நேரத்தில். காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.

ஒருவரின் பேராசை மற்றொருவர் கோடிஸ்வரானாக மூலதனமாக ஆகிறது.பேராசையை தாண்டும் விதமான விளம்பரம் தஞ்சை முழுவதும் பிட் நோட்டிஸாக வலம் வந்தது.

 

ஜே.ஜே.குருப்ஸ் என்ற நிறுவனம் பெயரில் அதிரடி விளம்பரத்தை கண்ட மக்கள் தஞ்சை சீனிவாசபுரம் கிரிசாலையில் உள்ள அலுவலகம் முன்பு குவிந்தனர். பெண்களை கவரும் வகையில் இருந்த விளம்பரத்தால் பெண்கள் அதிக அளவு திரண்டு வந்துள்ளனர்.

 

தமிழகத்திலேயே முதல்முறையாக தஞ்சையில் ஜே.ஜே.குருப்ஸ்ன் பட்டு திருவிழா என்ற கொட்டை எழுத்தில் புண்ணகையுடன் தாடியுடன் ஸ்மார்ட்டான நிர்வாக இயக்குனர் சந்திரன் புகைப்படம். அதற்கு கீழ் ஒரு பட்டுப்புடவை வாங்கினால் அதே விலையில் 3 பட்டுப்புடவை இலவசம். ஆரம்ப விலை 1800 ரூபாய் முதல். மற்றொரு விளம்பரம் ஜே.ஜே.கோல்டு வழங்கும் தங்கம் திருவிழா, வெள்ளி திருவிழா பழசுக்கு புதுசு ஆஃபர் இப்படி கவர்ச்சிக்கரமான விளம்பர பிட் நோட்டிஸ் பெண்களின் பேராசைக்கு அச்சாணி போட்டது.

 

100 கிராம் வெள்ளி நகை வாங்குபவர்களுக்கு வெள்ளி மோதிரம் இலவசம். தங்க நகைகளுக்கு செய்கூலி சேதாரம் கிடையாது சிறப்பு தள்ளுபடி என கவர்ச்சிக்கரமான பரிசுகளால் கவர்ந்த பேராசை பிடித்தவர்கள் பணத்தை ஜே.ஜே.குருப்ஸில் கொட்டி உள்ளனர்.

 

இவர்களில் மேலத் திருப்பருந்துத்தியை சேர்ந்த முத்தமிழ் என்ற பெண் ஜே.ஜே.குருப்ஸ் நிர்வாக இயக்குனர் சந்திரனிடம் மாதாந்திர ரிட்டன் டெபாசிட் திட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி உள்ளார்.

 

இந்த தொகைக்கு மாதம் தோறும் பங்கு தொகையாக 4500 ரூபாய் வழங்கி உள்ளார். இதனால் சந்தோஷம் அடைந்த முத்தமிழ் மேலும் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தார். இதற்கான பங்கு தொகையாக இரண்டு மாதங்கள் 7500 ரூபாய் வழங்கி உள்ளார்.

 

 

அடுத்தடுத்த மாதஙகள் பங்கு தொகை தராமல் சந்திரன் இழுத்தடித்து வந்துள்ளார். இந்த நிலையில் அலுவலகம் பூட்டப்பட்டு, சந்திரனின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்ததால் சந்திரனை தொடர்புகொள்ள முடியாமல் தவித்தார்.

 

தன்னை போல் பலர் பல்வேறு திட்டங்களில் பணம் செலுத்தி ஏமாந்து இருப்பதை அறிந்த முத்தமிழ் தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த ஜே.ஜே.குருப்ஸ் நிர்வாக இயக்குனர் சந்திரனை 12 மணி நேரத்தில் கைது செய்தனர்.சந்திரன் மீது 406 மற்றும் 420 ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS