BREAKING NEWS

சிறுமலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 3 பேர் கைது, 335 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

சிறுமலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 3 பேர் கைது, 335 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

திண்டுக்கல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் DSP.சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் கருப்பையா, சேகர் காவலர்கள் அருண்பிரசாத், அங்குராஜ் ஆகியோர் கொண்ட போலீசார் சிறுமலை பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது தென்மலை பகுதியில் தோட்டத்துப்பகுதியில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த சேசுராஜ்கென்னடி(40), ராமன்(56), மலைச்சாமி(55) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 335 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்

மேலும் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான கோபி, தங்கப்பாண்டி ஆகிய 2 பேரை தாலுகா போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

CATEGORIES
TAGS