சிவகங்கை மாவட்டம், திருச்சி மரக்கடை அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் திரு வினோத் அவர்களின் அகால மரணத்திற்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் புனித ஜஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் திருச்சி மரக்கடை அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் திரு வினோத் அவர்களின் அகால மரணத்திற்கு இரங்கல் கூட்டம் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முரளி செயலாளர் லிங்க குமார் பொருளாளர் மகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் ஆரோக்கிய ஜெயராஜ் சத்யா ஜீவா மகேஸ்வரி கவிதா உஷா சுகப்பிரியா கார்த்திக் பாஸ்கரன் கனகராஜ் ஆகியோரால் நடத்தப்பட்டது .

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் திரு இளங்கோவன் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக அமைப்புச் செயலாளர் திரு வினோத் மற்றும் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் திரு கந்தசாமி ஆகிய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் டிஆர்பி அலுவலகப் பணிக்கு ஆசிரியரை அவசர கதையாக அழைக்கப்பட்டு அன்னாருக்கு உடலளவிலும் மனதளவிலும் அலைக்கழிக்கப்பட்டு சென்னையில் சாலை விபத்தில் ஏற்பட்ட மரணத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது மேலும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் கூட்டம் நிறைவு பெற்றது.
