சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் வாடி கிராமம் போக்குவரத்து மழையால் துண்டிக்கப்பட்டுள்ளது
செய்தியாளர் பி. முனீஸ்வரன்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் வாடி கிராமம் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் வாடி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ளன ஏற்கனவே பஸ் வசதி இன்றி தவித்து வரும் இவர்கள் இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று அருகில் உள்ள கிராமத்தில் உள்ள பேருந்தில் ஏறிச் சென்று பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் சென்று வருகிறார்கள்.
தோடர் மழை காரணமாக தற்பொழுது அதிகளவில் ஆற்றில் தண்ணீர் வருவதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
ஆற்று நீர் கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்;
ஏற்கனவே அரசு அதிகாரிகளிடம் பாலம் கட்டி தர வேண்டி பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. இதே நிலைதான் பல ஆண்டுகளாக தொடர்கின்றன என்று அந்த கிராம மக்கள் மிகவும் வேதனையுடன் கூறினர்.