சுய உதவி குழு கடன் வாங்கித் தந்ததில் தகராறு உடுமலையில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை.
சுய உதவி குழு கடன் வாங்கித் தந்ததில் தகராறு உடுமலையில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை.

சுய உதவி குழு கடன் பெற்றுத் தந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் உடுமலையில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிபாளையம் விஜய் நகரை சேர்ந்தவர் அஸ்வின். இவரது மனைவி வளர்மதி இதே பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் மனைவி கவிதா கவிதாவிற்கு வளர்மதி சுய உதவிக் குழுவில் கடன் பெற்றுக் கொடுத்தார்.

கவிதா பணத்தை கட்டாமல் இழுத்து அளித்ததாக தெரிகிறது இது தொடர்பாக ஏற்கனவே வளர்மதி மற்றும் கவிதா குடும்பத்தினருக்கு தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ரஞ்சித் வீட்டை காலி செய்து கொண்டிருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து அஸ்வின் தனது நண்பர் வடக்கு நகர செயலாளர் குமரவேல் ( 24) அழைத்துக்கொண்டு ரஞ்சித் வீட்டிற்கு பணம் கேட்கச் சென்றுள்ளார். அங்கிருந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டது. இதில் அஸ்வின் மற்றும் குமரவேல் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டனர். இதில் குமரவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த அஸ்வின் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர் மேலும் இந்த கொலை தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தி செந்தில் (31)ஆத்தியப்பன் (43)ஆகிய 2 பேரை கைது செய்தனர் ரஞ்சித் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர் இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
