BREAKING NEWS

செங்கத்தில் காவல்துறை மற்றும் வருவாய் துறையை கண்டித்து பாமகவினர் சாலை மறியல்.

செங்கத்தில் காவல்துறை மற்றும் வருவாய் துறையை கண்டித்து பாமகவினர் சாலை மறியல்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே பாமகவினர்50க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் மற்றும் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. 

 

 

அப்போது அவர்கள் கூறுகையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்களின் 84 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கோளாப்பாடியில் பாமக கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்றிதை மாவட்ட செயலாளர் பாண்டியன் கேட்டபோது காவல்துறை ஆய்வாளருக்கும் பாமகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

 

அப்போது காவல் ஆய்வாளர் பாமக மாவட்ட செயலாளர் பாண்டியனை தள்ளியதாக கூறியும் கொடிக்கம்பத்தை அகற்றிய வட்டாட்சியர் மற்றும் காவல்துறை ஆய்வாளரை கண்டித்தும் கைது செய்யக் கோரியும் பாமகவினர் சாலை மறியல் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )