செங்கம் அருகே குடும்ப தகராரில் மகன்கள் தாக்கியதில் தந்தை சம்பவ இடத்திலேயே பலி மனைவி உட்பட 3 பேர் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தானிப்பாடி குபேரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சகாதேவனக்கும் அவரது மகன்கள் மணிகண்டன் சக்திவேலு இவர்களுக்கு இடையே குடும்ப தகராரில் சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கியதால்,
படுகாயம் அடைந்த சகாதேவன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார் பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தானிப்பாடி காவல் துறையினர் சகாதேவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர்.
வழக்கு பதிவு செய்து மகன்கள் மணிகண்டன் சக்திவேல் உறுதுணையாக இருந்த மனைவி அன்னக்கிளி ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சொத்துக்காக தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் தானிப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.