செங்கம் அருகே கோவில் திருவிழா காண வந்த இளைஞர் கிணற்றில் மூழ்கி பலி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு பகுதியில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காளியம்மன் கோவில் திருவிழாவை காண நவீன் என்பவர் தனது பாட்டி வீட்டிற்கு பெங்களூரில் பழக்கடையில் தன்னுடன் பணிபுரியும் நண்பர்களை திருவிழாவிற்காக அழைத்து வந்துள்ளார் அப்போது அருகில் உள்ள விவசாய கிணற்றில் தன் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பெங்களூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் பிரசாந்த் (22) தனது நண்பர்கள் அனைவரும் குளித்து விட்டு மேலே வந்த பின்னர் நீச்சல் தெரியாத பிரசாந்த் மட்டும் கிணற்றில் இறங்கி குளித்ததாக கூறப்படுகிறது.
நீச்சல் தெரியாததால் பிரசாந்த் நீரில் மூழ்கியதை கண்ட நண்பர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் வின்னர் பிரசாந்த்தை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் இறந்ததாக கூறியதை அடுத்து பிரசாந்தின் உறவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு உடல்கூறு ஆய்வுக்காக உடலை செங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டனர் பின்னர் விபத்து குறித்து செங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.