BREAKING NEWS

செங்கம் அருகே பள்ளியின் உள் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் ஒரு உடற்கல்வி ஆசிரியர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி.

செங்கம் அருகே பள்ளியின் உள் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் ஒரு உடற்கல்வி ஆசிரியர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்துள்ள தரடாபட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தம் வகுப்பு வரை சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இன்று ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக பள்ளியின் உள் மேற்கூரை திடீரென மாணவர்களின் மீது விழுந்ததில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் முருகேஷ் ஜனார்த்தனன் என்ற இரண்டு பள்ளி மாணவர்களும்,

உடற்கல்வி ஆசிரியர் தினகரன் ஆகியோர் பலத்தகாயம் ஏற்பட்டிருந்த மூவரையும் அங்கிருந்து மீட்டு தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

புதிய கட்டிடம் கட்டுப்பட்டு ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை உடனடியாக ஆய்வு செய்து பள்ளியின் தரத்தை கண்டறிந்து பழுது இருந்தால் உடனடியாக சரி செய்து தரப்பட வேண்டுமென மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )