BREAKING NEWS

சென்னை வந்த மோடி: திமுக அமைச்சர்கள், ஈபிஎஸ், பாஜகவினர் உற்சாக வரவேற்பு!

சென்னை வந்த மோடி: திமுக அமைச்சர்கள், ஈபிஎஸ், பாஜகவினர் உற்சாக வரவேற்பு!

சதுரங்க கரை பதித்த தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் மோடி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். தமிழக அரசின் சார்பாகச் சென்னை வந்த மோடியை அமைச்சர்கள் வரவேற்றனர்.

 

 

செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி அகமதாபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சதுரங்க கரை பதித்த தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் மோடி வந்திருந்தார். அப்போது தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். மேலும், விமான நிலையம் வந்த மோடியை எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

 

 

 

செஸ் தொடக்க விழா அரங்கில் உத்தரப் பிரதேசத்தில் கதக், மணிப்பூர் மணிப்பூரி, அசாமின் சத்ரியா, ஒடிசாவின் ஒடிசி, ஆந்திராவின் குச்சுப்புடி, கேரளாவின் மோகினி, தமிழகத்தின் பரதநாட்டியம் உள்ளிட்ட இந்தியாவின் 8 பாரம்பரிய நடனங்களைக் கலைஞர்கள் நிகழ்த்திக் காட்டினர். விழா மேடைக்கு வந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி, பட்டுச் சட்டையில் அணிந்து நிகழ்ச்சிகளை ரசித்து வருகிறார். இந்நிலையில் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் கடற்படை தளம் வந்தடைந்தார் மோடி. அங்கிருந்து தரை மார்க்கமாக விழா மேடைக்கு வந்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )