சேப்பாக்கம் கிராமத்தில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா..!
![சேப்பாக்கம் கிராமத்தில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா..! சேப்பாக்கம் கிராமத்தில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா..!](https://aramseithigal.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-27-at-10.39.27-AM-e1669538382653.jpeg)
கடலூர் மாவட்டம்,
திமுக மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை கடலூர் மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சேப்பாக்கம் கிராமத்தில், கிளைச் செயலாளர் தண்டபாணி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
இந்நிகழ்வில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர். பின்னர் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காண படிவத்தை இளைஞர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் இவ்விழாவில் கிளை பொருளாளர் ஆனந்தன் ஒன்றிய இளைஞரணி நிர்வாகி விக்னேஷ், ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
CATEGORIES கடலூர்
TAGS Dmkஅரசியல்கடலூர் மாவட்டம்கடலூர் மாவட்டம் நல்லூர்சேப்பாக்கம் கிராமம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திமுக