சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் , மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் காயம் மக்கள் நல அமைப்பு மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நேரில் ஆய்வு:-

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து இரண்டு மாணவர்கள் காயம் அடைந்தனர். சேரன்மகாதேவி பெரியார் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் நல அமைப்பு மற்றும் எஸ். டி.பி.ஐ கட்சி,ஆய்வு செய்தனர்.
மக்கள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவராஜ் மற்றும் மக்கள் நல அமைப்பின் தலைவர் ஆறுமுக நைனார் தலைமையில், எஸ்.டி.பி.ஐ கட்சியினுடைய மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகம்மது ஷஃபி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் அம்பை ஜலீல், சேரன்மகாதேவி நகர தலைவர் அஹமது,நகர செயலாளர் கோதர்மைதீன், ஆகியோர் தலைமை ஆசிரியர் எவாஞ்சலின் மற்றும் ஆசிரியர்களை நேரில் சந்தித்து, மாணவர்களுக்கு உரிய நிவாரணங்கள் மற்றும் முறையான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யப்பட வேண்டும்.
மாணவர்களின் காலாண்டு தேர்வு சமயமாக இருப்பதால், அரசு மற்றும் பள்ளிகல்வித்துறை உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
பள்ளி கட்டிடத்தில் பாழடைந்து இருக்கக்கூடிய, அந்த கட்டிடத்தை சரி செய்து புதிய கட்டிடமாக கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தினோம்.
தமிழக அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை உடனடியாக மாணவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய பள்ளிகளை விரைவில் ஆய்வு செய்து, அதற்கு தகுந்த நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களான சிந்தா மற்றும் கான்சா ஆகிய இரண்டு மாணவர்களையும், அவருடைய பெற்றோர்களுடன் சந்தித்து, உரிய மருத்துவமனை சிகிச்சைக்கு அனுப்பி வைக்க பரிந்துரை செய்தோம்.
மேலும் நாங்கள் பள்ளிக்கூடத்தில் மாணவர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்து, ஆய்வு நடத்தும் பொழுது, மாவட்ட கல்வி அதிகாரி திருமதி ரெஜினி அவர்கள் ஆய்வு செய்ய வந்திருந்தார்கள்.
அவர்களிடத்திலும் எங்களுடைய கோரிக்கைகளை எடுத்துரைத்தோம். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி எங்களிடம் வாக்குறுதி அளித்தார்.