சேலம் விருதாச்சலம் செல்லும் பயணிகள் இரயில் 2 ஆண்டுகளுக்கு பின் இன்று முதல் இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி,
சேலம் விருதாச்சலம் செல்லும் பயணிகள் இரயில் 2 ஆண்டுகளுக்கு பின் இன்று முதல் இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி,

சேலத்திலிருந்து ஆத்தூர் வழியாக விருதாச்சலம் செல்லும் இரயில் தினமும் இருமுறை இயக்கப்பட்டது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா ஊரடங்கின் காரணமாக இரயில் சேவை நிறுத்தப்பட்டது.


பின்னர் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் சேலம் – விருதாச்சலம் இடையே ஒருமுறை மட்டும் பயணிகள் இரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் ஏற்கனவே நிறுத்தப்பட்ட பயணிகள் சிறப்பு இரயில் இயக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்று சேலம் ஜங்ஷன்லிருந்து ஆத்தூருக்கு 11:10 மணி அளவில் வந்த பயணிகள் ரயிலை அனைத்து வணிகர் சங்கத்தினர் சார்பில் பயணிகள் இரயிலை வரவேற்று பின்னர் ரயில் ஓட்டுனரகள் இருவருக்கும் பொன்னாடை போர்த்தி ,பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிச்சியை தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
