தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்ட 1000 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. அதன்பேரில் சோனியாகாந்தி அமாலக்கதுறை அலுவலகத்தில் நேற்று அவர் விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஓன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தினர். இந்நிலையில் கே.எஸ் அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் 1000 பேர் மீது எழும்பூர் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், தீ அல்லது வெடிப்பொருட்களை அஜாக்கிரதையாக கையாளுதல், தடையை மீறி கூடுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.