ஜூன் 4 வது வாரத்தில் பள்ளிகள் திறப்பு?!
ஜூன் 4 வது வாரத்தில் பள்ளிகள் திறப்பு?!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் பள்ளிகளில் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தன.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பிப்ரவரி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மற்ற வகுப்புக்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜூன் மாதம் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
கோடை வெயில் மிக அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தற்போது ஜூன் 4ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்கலாம் என கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வினாத்தாள் திருத்தும் பனி, ஆசிரியர்களுக்கான பயிற்சி, காலை சிற்றுண்டி திட்டத்துக்கான முன்னேற்பாடுகள், பள்ளிகளை சீரமைக்கும் பணி என அனைத்து பணிகளும் நிறைவடைய ஜூன் 4வது வாரம் ஆகலாம்.
