ஜெயில் அதாலத் சிறைச்சாலை நீதி மன்றம்.

சென்னை உயர் நீதிமன்ற தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவு படியும், தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் செயலர் அவர்களின் வழிகாட்டுதல் படி,
கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவருமான திருமதி.டி.சண்முகப்பிரியா அவர்கள் ஜெயில் அதாலத் என்று அழைக்கப்படும் சிறைச்சாலை நீதிமன்றம், தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடத்திட நீதிபதிகளை நியமித்து உத்தரவிட்டார்கள்.
அதன்படி திருவிடைமருதூர் கிளைசிறைச்சாலையில் மாவட்ட உரிமை இயல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் என்.சிவபழனி சிறைச்சாலை நீதிமன்றத்தை நடத்தினார்கள்.
விசாரணை கைதிகளாக இருந்த சிறைவாசிகள் 49 பேரிடம் அவர்களின் வழக்கு விபரம் குறித்து நேரடியாக உரையாடி, அவர்களில் யாருக்கேனும் வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் வழக்கறிஞர் நியமனம் தேவைப்படுகிறதா என்று கேட்டறிந்தார்கள்.
அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 9 பேரிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சட்டப்படி தகுதியுள்ள இருவரிடம் மட்டும் ஜாமீன் மனுக்கள் எழுதிப் பெறப்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்தார்.
முடிவில் வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் விசாரணை கைதிகளுக்கு வழங்கப்படும் சட்ட அறிவுரை மற்றும் நீதிமன்றம் சார்ந்த சட்ட உதவிகள் பற்றி எடுத்துரைத்தார்.
கும்பகோணம் கிளை சிறையில் எம்.எஸ்.பாரதிதாசன், நீதித்துறை நடுவர் எண்-1 ஏற்று நடத்தினார்கள். 51 விசாரணை கைதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நான்கு சிறைவாசிகள் 4பேர் மட்டும் வழக்கறிஞர் நியமனம் கோரி மனு அளித்தார்கள்.
அதில் இருவர் மனுக்கள் மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வழக்கறிஞர் நியமித்திட பரிந்துரை செய்தார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை நீதிமன்ற ஊழியர்கள், சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து கும்பகோணம் சட்டப் பணிகள் குழுவின் தன்னார்வலர்கள் எஸ்.பி.ராஜேந்திரன் மற்றும் கே.குணசீலன் செய்திருந்தனர்.